அண்மைய செய்திகள்

recent
-

நாளாந்தம் இலங்கையில் 07 பேரின் உயிரை பறிக்கும் விபத்துக்கள்

 இலங்கையில் வீதி விபத்துக்களின் போது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலேயே அதிகளவானோர் உயிரிழப்பதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதி விபத்துக்களினால் நாளாந்தம் சுமார் 7 பேர் உயிரிழப்பதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

"இலங்கையில் வருடாந்தம் விபத்துக்களில் 12,000 பேர் இறக்கின்றனர். அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வீதி விபத்துக்களினால் மரணிக்கின்றனர். இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 7 அல்லது 8 பேர் விபத்துக்களில் இறக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் மற்றும் பின்னால் பயணிப்பவர்களாகும். இலங்கையின் இளைஞர் சமூகம் 18-28 வயதுக்கு இடைப்பட்ட  இளம் வயதில் இது போன்ற விபத்துக்களால் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். கடந்த ஆண்டு 2,310 பேர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.

வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு குடிபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் என பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட சுட்டிக்காட்டியுள்ளார்.



நாளாந்தம் இலங்கையில் 07 பேரின் உயிரை பறிக்கும் விபத்துக்கள் Reviewed by Author on June 27, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.