பொதுக் கழிப்பறையில் சடலம் மீட்பு
நுவரெலியா பேருந்து நிலையத்தின் பொதுக் கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (26) மாலை கழிப்பறையில் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், 1990 எம்புலன்ஸ் சேவை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, குறித்த நபர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர்.
நுவரெலிய - ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுக் கழிப்பறையில் சடலம் மீட்பு
Reviewed by Author
on
June 27, 2024
Rating:

No comments:
Post a Comment