அண்மைய செய்திகள்

recent
-

போதையில் மனைவியை கொலை செய்துவிட்டு போலீசாரிடம் பொய் சொன்ன கணவர்

 தனது மனைவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாக பொய் முறைப்பாடு செய்து பொலிஸாரை தவறாக வழிநடத்த முயன்ற உயிரிழந்த பெண்ணின் கணவர் உட்பட இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொழும்பின் புறநகர் பகுதியான தலங்கம உத்யான மாவத்தையில் தற்காலிகமாக வசித்து வந்த தாருகா நதி குமாரி என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கணவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தமையினால் இருவருக்கும் இடையில் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


கணவரின் நண்பர் ஒருவரும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதாலும் வாக்குவாதம் வலுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கடந்த ஆறாம் திகதி மனைவி தனது நண்பருடன் வீட்டிற்கு வந்த போது கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் கணவரின் நண்பரும் இதில் ஈடுபட்டு பெண்ணுடன் சண்டையிட்டுள்ளார்.


பின்னர், வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து பெண்ணின் தலை, கழுத்து மற்றும் பல இடங்களில் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திவிட்டு, பெண்ணின் கணவர் வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு ஹிகுரக்கொட பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளார்.


பெண் கொல்லப்பட்டதைக் கண்டு பயந்துபோன இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையக் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் பரிசோதகர் லக்ஷிதாவைச் சந்தித்து, பொய்யான முறைப்பாடு செய்துள்ளனர்.


பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு, கணவர் மற்றும் அவரது நண்பரிடம் விசாரணை நடத்திய பின்னர், அவர்கள் அளித்த முரண்பாடான வாக்கு மூலங்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


போதையில் மனைவியை கொலை செய்துவிட்டு போலீசாரிடம் பொய் சொன்ன கணவர் Reviewed by Author on June 12, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.