துணுக்காய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்
துணுக்காய் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்றைய தினம் (11) துணுக்காய் பிரதேச செயலகத்தில் காலை 09.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் துணுக்காய் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
குறித்த கூட்டத்தில் விவசாயம் ,காணி, வனவளத் திணைக்களம் அபகரித்த விடுவிக்க வேண்டிய காணிகள் தொடர்பிலும் , கல்வி , சட்டவிரோத மணல் கிரந்த் அகழ்வு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் முதன்மையாக கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக வனவளத் திணைக்களம் அபகரிக்கும் மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது அது மாத்திரமின்றி மக்களது காணிகளை வனவள திணைக்களம் அபகரிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என மக்களால் தெரிவிக்கப்பட்டது
இதனை விடவும் ஐயன்கன்குளம் புத்துவெட்டுவான் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெறும் மணல் அகழ்வு கிரவல் அகழ்வுகளால் ஏற்றப்படும் பாதிப்புகள் தொடர்பிலும் அவற்றை நிறுத்துமாறும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது
இந் கூட்டத்தில் துணுக்காய் பிரதேச சபைஅதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்’ பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
விசேடமாக குறித்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் திணைக்களங்கள் பலவற்றினுடைய தலைவர்கள் பிரசன்னமாகாமல் இருந்தமைக்கு மக்கள் மத்தியில் கடும் விசனம் வெளியிடப்பட்டிருந்தது
Reviewed by Author
on
June 11, 2024
Rating:


No comments:
Post a Comment