அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் : ஹரிஸின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சுசில் வெளியிடுவதாக உறுதியளிப்பு !

 கிழக்கு மாகாணம் திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டமை தொடர்பிலும், அந்த மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் மன உளைச்சலில் உள்ள விடயத்தையும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டதரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் சபையில் எடுத்துரைத்து அந்த மாணவிகளின் பெறுபேறுகளை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சரை கேட்டுக்கொண்டார்.


இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு உள்ள சந்தேகங்கள் தொடர்பிலும் அந்த சந்தேகங்கள் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் பரீட்சை திணைக்களம் மிகவும் நம்பிக்கையான மக்களின் நன்மதிப்பை பெற்ற திணைக்களம் என்றும் தெரிவித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெறுபேறுகளை ஓரிரு தினங்களுக்குள் உடனடியாக வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அந்த மாணவிகளின் பெறுபேற்றை ஒருவார காலத்தினுள் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸிடம் உறுதிபட தெரிவித்தார். 


திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் : ஹரிஸின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சுசில் வெளியிடுவதாக உறுதியளிப்பு ! Reviewed by Author on June 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.