அண்மைய செய்திகள்

recent
-

கனடாவிற்கு செல்லவிருந்த யாழ் இளைஞன் திடீர் கைது

 போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.


விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்ததுடன், சந்தேகநபர் அனுராதபுரத்தில் உள்ள தரகர் ஒருவரின் உதவியுடன் பெரும் தொகையான பணம் செலுத்தி கனடாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


சந்தேக நபர் தனது விமான அனுமதியை முடித்துவிட்டு தனது கடவுச்சீட்டை குடிவரவு அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.


இதன்போது கடவுச்சீட்டில் இருந்த புகைப்படம் குறித்து சந்தேகம் அடைந்த அதிகாரி, கணினியில் தகவல்களை பதிவு செய்ததுடன், குறித்த கடவுச்சீட்டு வேறு ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.


இதன்படி, கடவுச்சீட்டின் உண்மையான உரிமையாளர் திருகோணமலை நீதிமன்றத்தால் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட ஒருவர் என்பதும் தெரியவந்தது.


அதன்படி, சந்தேக நபரை குடிவரவு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதன்போது சந்தேக நபரின் பையில் அவரது உண்மையான கடவுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த இளைஞனின் பயணப் பையில் இருந்து அவரது உண்மையான தேசிய அடையாள அட்டையும் மீட்கப்பட்டதுடன், அதன் பிறகு அவர் குடிவரவு அதிகாரிகளிடம் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கனடாவிற்கு செல்லவிருந்த யாழ் இளைஞன் திடீர் கைது Reviewed by Author on June 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.