அண்மைய செய்திகள்

recent
-

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா, 17ஆவது சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் !

 உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா மற்றும்  17ஆவது சர்வதேச மாநாடு  நேற்று வெள்ளிக்கிழமை (14) யாழ்ப்பாணம் தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.  

4வது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு நினைவாலயத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பண்பாட்டுக் குழு வரவேற்புடன் விழா அரங்கிற்கு பேராளர்கள் அழைத்து வரப்பட்டனர். 

மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்  நிகழ்வில் சர்வதேச மாநாட்டிற்கான நூல் வெளியிடப்பட்டது.  

நினைவு சின்னமும் வழங்கி வைக் கப்பட்டதுடன் நிகழ்வில்   மதத்தலைவர்கள், புதுவைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் பாஞ். இராமலிங்கம், லண்டனை சேர்ந்த அமுது இளஞ்செழியன் வி ஐ டி பல்கலைக்கழகம் நிறுவநர் - வேந்தர், முனைவர் ஜி.விசுவநாதன் அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர், பேராசிரியர் இரா. வேல்ராஜ்,  வைத்தியர்  பகீரதன் அமிர்தலிங்கம் துணைத் தலைவர் IMTC இலண்டன், மாவை சோ. தங்கராஜா, ஆலோசகர், IMTC, ஜெர்மனி   வவுனியா பல்கலைக்கழக தூணைவேந்தர் பேராசிரியர் த. மங்களேஸ்வரன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எ. இளங்கோவன்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான  மாவை  சோ.சேனாதிராஜா, எம்.கே சிவாஜிலிங்கம் யோகேஸ்வரன்  மற்றும் இலங்கை  இந்தியா, மலேசியா என கல்வியலாளர்கள் முதல்நாள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வில் மாநாட்டு புத்தக வெளியீடு மற்றும் சிறப்புரைகள் இடம்பெற்றதுடன் மூன்று நாட்கள் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   



உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா, 17ஆவது சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் ! Reviewed by Author on June 15, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.