திருமண பந்தத்தில் இணைந்த மிக உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை!
இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் (Tharjini Sivalingam) திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையாக கருதப்படும் தர்ஜினி சிவலிங்கம், யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவனை பிறப்பிடமாக கொண்டவர் ஆவார்.
இலங்கைக்காக அதிக வலைப்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடியவர் எனும் புகழைக் கொண்ட தர்ஜினி, 2012 ஆம் ஆண்டு இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.
இலங்கையின் வலைப்பந்தாட்ட தேசிய அணிக்காக சுமார் 20 ஆண்டுகள் விளையாடியுள்ள இவர், இலங்கை அணி பெற்றுக்கொண்ட வெற்றிகளுக்கு காரணமாகவும் இருந்துள்ளார்.
அத்துடன் இவர், இலங்கை தேசிய வலைப்பந்து அணியிலிருந்து கடந்த வருடம் தனது ஓய்வினை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
June 18, 2024
Rating:


No comments:
Post a Comment