நோர்வேயின் வர்த்தக அமைச்சரைச் சந்தித்த செந்தில் தொண்டமான்!
நோர்வேயின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் சிசிலி மிர்செத்தை கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஒஸ்லோவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது நோர்வேயின் உதவி எப்போதும் இலங்கைக்கு பக்க பலமாக இருந்துள்ளது என தெரிவித்த செந்தில் தொண்டமான், இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் 200 வது வருடத்தின் முதல் நினைவு முத்திரையையும் அமைச்சர் சிசிலி மிர்செத்க்கு வழங்கி வைத்தார்.
அத்துடன் சிசிலி மிர்செத்தை இலங்கையின் கிழக்கு மாகாணம் மற்றும் பெருந்தோட்டப் பகுதிக்கு விஜயம் செய்யுமாறும் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்திருந்தார்.
நோர்வேயின் வர்த்தக அமைச்சரைச் சந்தித்த செந்தில் தொண்டமான்!
Reviewed by Author
on
June 07, 2024
Rating:
No comments:
Post a Comment