போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள சிவப்பு எச்சரிக்கை
யுக்திய நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணை நடவடிக்கையின் போது வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை
இத்தகவல்கள் அனைத்தும் நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கமைய, சந்தேகநபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்படும் எனவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
Reviewed by Author
on
June 09, 2024
Rating:


No comments:
Post a Comment