16 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூத்த சகோதரன் கைது
16 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் மூத்த சகோதரன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
16 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூத்த சகோதரன் கைது
Reviewed by Author
on
June 29, 2024
Rating:

No comments:
Post a Comment