அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அதிபர்,ஆசிரியர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.

 அதிபர்,ஆசிரியர் தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று புதன்கிழமை (2) மதியம் 2 மணி அளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


 மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமான குறித்த ஆர்பாட்ட பேரணியாக வலயக்கல்வி பணிமனை வரை சென்றது. 


வலயக்கல்வி பணிமனை க்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .


குறிப்பாக  1996 ஆம் ஆண்டு தொடக்கம் காணப்படும் ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வினை வழங்க கோரியும்,வறிய மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் கற்றல் உபகரணங்களை அரசாங்கம்  வழங்க முன்வர வேண்டும் எனவும் ,பாடசாலைகளில் பெற்றோர்களிடம் இருந்து பணம் அற விடுவதை நிறுத்த வேண்டும், போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. .


   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் "இலவச கல்வியை உறுதி செய்,ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டின் மிகுதி மூன்றில் இரண்டு பங்கை கொடு,கல்விக்கான ஒதுக்கீட்டை அதிகரி போன்ற பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் .


  குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த  அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதோடு, குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









மன்னாரில் அதிபர்,ஆசிரியர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு. Reviewed by Author on June 12, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.