உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த வேணாவில் கிராம மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தின்புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் பல்வேறு நெருக்கடியான சூழலில் கல்வி கற்று 2023 ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் தோன்றி சித்தியடைந்த வேணாவில் கிராம மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (12) வேணாவில் பொதுநோக்கு மண்டப வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது
வேணாவில் கிராம மக்களின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உயர்தரத்தில் சித்தியடைந்து சாதித்த மாணவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் சிவபாலன் குணபாலன் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் சி. பாஸ்கரன், வேணாவில் சிறி முருகானந்தா வித்தியாலய அதிபர் சி.மோகஜீவன்,
வேணாவில் சிறி முருகானந்தா வித்தியாலய முன்னாள் அதிபர் இ.செல்வநாயகம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அதிபர் இ.நேவிற் ஜீவராசா, கலைமகள் கலைக் கல்லூரி நிர்வாகி சி.றமேஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பதக்கம் அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தனர்
இந்நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,கிராம மக்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
நிகழ்வில் கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 02 வது நிலையைப் பெற்ற தி. மோகனப்பிரியா, 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 04 வது நிலையைப் பெற்ற த. கோபிகா, 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 08 வது நிலையைப் பெற்ற ம. கிஷாளினி, 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 14 வது நிலையைப் பெற்ற மு. டிலைக்சனா மற்றும் கலைப்பிரிவில் சித்தியடைந்த தி. துவாரகா, கி, விதுசன், ஆகியோரும் வணிகப்பிரிவில் A2B சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 20 வது நிலையைப் பெற்ற பொ. கம்சனா ஆகிய மாணவர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்

No comments:
Post a Comment