உலக சுற்றுச் சூழல் தினமான இன்று (05) முல்லைத்தீவில் மரநடுகை
உலக சுற்றுச் சூழல் தினமான இன்று (05) கரைத்துறைபற்று பிரதேச செயலகமும் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகமும் இணைந்து முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியோரத்தில் சுற்றுலா பகுதியாக அபிவிருத்தி செய்யப்படும் பகுதியில் மரநடுகை திட்டத்தை முன்னெடுத்தனர்
அந்த வகையில் குறித்த சுற்றுலா தளமாக அபிவிருத்தி செய்யப்படும் நீர் நிலையை சுற்றிலும் இலுப்பை மற்றும் பூமரக் கன்றுகள் நாட்டப்பட்டது
இந்நிகழ்வில் கரைதுறைபற்று பிரதேச செயலாளர் மணிவண்ணன் உமாமகள் கரைதுறைப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியக பணியாளர்கள் கிராம அலுவலர்கள் பிரதேச செயலக ஊழியர்கள்
பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment