கடற்கரையில் இருந்து சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
புத்தளம் பிரதேசத்தில் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவான கடற்கரை பகுதியில் பெண்ணின் சடலமொன்று சிதைவடைந்த நிலையில் நேற்று (2) மீட்கப்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்கரையில் இருந்து சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
Reviewed by Author
on
July 03, 2024
Rating:

No comments:
Post a Comment