பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் வேட்பாளரை களமிறக்க தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானமிக்க கூட்டம் கொழும்பு – விஜயராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இடம்பெற்றது.
கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தகவல்களை வெகு விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment