அண்மைய செய்திகள்

recent
-

40 ஆண்டுகள் கடந்த பின்னரும் சிங்கள இனவெறியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடமுடியாத நிலையில் தமிழர்கள் - கறுப்பு ஜூலை குறித்த செய்தியில் சீமான்.

 இனப்படுகொலைக்கு உள்ளாகி 40 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்றளவும் சிங்கள இனவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமல் அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டிய அவலநிலையில் தமிழ் மக்கள் வாடுவது வரலாற்றுப் பெருந்துயரமாகும்!என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்


அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது


1983 ஆம் ஆண்டு இலங்கை இனவாத அரசின் ஆதரவுடன் சிங்கள இனவெறியர்கள்  தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும்  எரித்து உடமைகளைக் கொள்ளையடித்து வீதிகள் தோறும் குருதியில் நனையஇ வீடுகள் தோறும் பிணங்கள் வீழ திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றழித்த கறுப்பு ஜூலை இனப்படுகொலை நாள் இன்று!


ஈழத்தாயகத்தில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி 40 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்றளவும் சிங்கள இனவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமல் அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டிய அவலநிலையில் தமிழ் மக்கள் வாடுவது வரலாற்றுப் பெருந்துயரமாகும்!


சிங்கள இனவெறிக்கு இலக்காகி கருப்பு சூலை இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்




40 ஆண்டுகள் கடந்த பின்னரும் சிங்கள இனவெறியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடமுடியாத நிலையில் தமிழர்கள் - கறுப்பு ஜூலை குறித்த செய்தியில் சீமான். Reviewed by Author on July 24, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.