பிரித்தானியாவில் உணர்வு பூர்வமாக இடம் பெற்ற கருப்பு ஜூலை நினைவு நாள் நிகழ்வு
தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளை நினைவுகூறும் கருப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம் பெற்றது
தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் 41 ஆண்டை கடந்து போகும் போது தமிழர் சிந்திய குருதியும் சிறைகளில் சிதைத்த எம்வீரரர்களின் கண்களும் காணத்துடித்தது தமிழீழமே.... எனும் தொனிப்பொருளில் ஜக்கிய இராச்சியத்தின் தமிழ் இளையோர் அமைப்பும் பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும் இணைந்து குறித்த நிகழ்வை ஒழுங்கமைத்து நடாத்தினர்
குறித்த அற போராட்டத்தின் போது இன்றுவரை தொடரும் தமிழினவழிப்பின் ஆவண நிழற்பட காட்சிப்படுத்தலும் உறுதியேற்பும் நிகழ்வும் இடம் பெற்றது
இவ் போராட்டத்தில் இலங்கை நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து பிரித்தானிய நாட்டில் அகதிகளாக வாழும் பல இளைஞர்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
July 24, 2024
Rating:


No comments:
Post a Comment