யாழில் இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதா? - அதிகாரிகள் விசாரணை
யாழ்ப்பாணத்தில் மாணவிகள் தங்கி இருந்த இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் பிள்ளைகள் தங்கி இருக்கும் இடம் ஒன்றின் வெளிப்புறப் பாதுகாப்புக்காக சிசிடிவி கமரா பொருத்தப்பட்டிருந்தது.
குறித்த கமராக்களில் பெண் மாணவிகள் குளிக்கும் பகுதியின் சில பகுதிகள் பதிவாகியுள்ளமை தொடர்பிலும் வேறு சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி குறித்த பகுதிப் பிரதேச செயலகத்துக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அதிகாரிகள் குறித்த இல்லத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர். அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
July 02, 2024
Rating:


No comments:
Post a Comment