கண்டி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கண்டி நீதிமன்றத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, கண்டி நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்துக்கு வருகை தந்த பொதுமக்களும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கண்டி நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கண்டி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Reviewed by Author
on
July 02, 2024
Rating:

No comments:
Post a Comment