அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையை சேர்ந்த பெண் பயணியொருவர் நடுவானில் மரணம் - கராச்சி விமானநிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கம்

 இலங்கையைச் சேர்ந்த பெண்பயணியொருவர் நடுவானில் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து பயணிகள் விமானமொன்று அவசர அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இலங்கையை சேர்ந்த 57 வயதான பலவினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபாயிலிருந்து கொழும்பிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்திலிருந்த குறிப்பிட்ட பெண்பயணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததாகவும் இதனை தொடர்ந்து விமானி கராச்சி விமானநிலையத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கான வேண்டுகோளை விடுத்தார் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.

விமானம் தரையிறங்கியதும் உடனடியாக பாகிஸ்தானின் சிவில்விமான போக்குவரத்து அதிகாரசபையை சேர்ந்தவர்கள் மருத்துவபரிசோதனைக்காக விமானத்திற்குள் ஏறியுள்ளனர்.

அவர்கள் சிகிச்சையளித்த போதிலும் இலங்கை பெண் உயிரிழந்துள்ளார்.அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் விமானநிலையத்தின் மருத்துவ அதிகாரி குறிப்பிட்ட பெண்ணிற்கு மரணசான்றிதழை வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட விமானம் பெண்ணின் உடலுடன் கொழும்பை நோக்கி பயணிக்கின்றது.



இலங்கையை சேர்ந்த பெண் பயணியொருவர் நடுவானில் மரணம் - கராச்சி விமானநிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கம் Reviewed by Author on July 11, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.