இலங்கையில் நூறு வயதைக் கடந்தவர்கள் 495 பேர் உள்ளனர் !
இலங்கையில் நூறு வயதைக் கடந்தவர்கள் 495 பேர் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று வியாழக்கிழமை (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முதியோர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித்தொகையைப் பெற இந்த நபர்களுக்கும் உரிமை உண்டு எனக் குறிப்பிட்டார்.
"60 வயதுக்கு மேற்பட்டோர் 27 இலட்சம் பேர் உள்ளனர். இந்நிலையில், ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 10 இலட்சத்தை தாண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நூறு வயதைக் கடந்தவர்கள் 495 பேர் உள்ளனர் !
Reviewed by Author
on
July 11, 2024
Rating:

No comments:
Post a Comment