அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தனின் மறைவிற்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்

 இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்தி மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் மறைவு குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கலில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.  சம்பந்தன் உடனான இனிய நினைவுகள் எப்போதும் நினைவுகூரப்படும். சம்பந்தன் இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவதிற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் என தெரிவித்துள்ளார்.




சம்பந்தனின் மறைவிற்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் Reviewed by Author on July 01, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.