ஜனாதிபதி தேர்தல் - வௌியான வர்த்தமானி அறிவித்தல்!
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட இன்று முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
அதன்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் பெயர் குறித்து நியமனம் செய்யப்பட்ட வேட்பாளராயின் 50 ஆயிரம் ரூபாவும், வேறொரு அரசியல் கட்சியினால் அல்லது வாக்காளர் ஒருவரினால் பெயர் குறித்து நியமனம் செய்யப்பட்ட வேட்பாளராயின் 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக வைப்பிலிடப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
July 26, 2024
Rating:


No comments:
Post a Comment