இலங்கையில் 22 வீதமான குடும்பங்கள் கடனாளியாகியுள்ளன
இலங்கையில் 22 வீதமான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக கடனாளியாகியுள்ளனர் என புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட குடும்ப அலகு கணக்கெடுப்பு (2023) அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 22.3 வீதமான குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடன் பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அரச மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து 21.9 வீதமும், சமுர்த்தி வங்கிகளிடமிருந்து 7.1 வீதமும், கடன் வழங்குபவர்களிடமிருந்து 9.7 வீதமும், நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களிலிருந்து 8.7 வீதமும் கடன் பெற்றுள்ளனர்.
மேலும், 15.7 சதவீதம் பேர் பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும், 17 சதவீதம் பேர் வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் பழுதுபார்ப்பதற்காகவும், 9.9 சதவீதம் பேர் சுகாதார தேவைகளுக்காகவும், 11.9 சதவீதம் பேர் முந்தைய கடனை அடைப்பதற்காகவும் கடன் பெற்றுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்ட அதிகமாக கடன் வாங்குவதையும் இந்த அறிக்கை காட்டுகிறது.
கடன் பொறுப்புகள், கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமை, காலதாமதமாகச் செலுத்துதல் அல்லது கடன்களைச் சார்ந்திருப்பது போன்ற காரணங்களால் கடனைத் திருப்பிச் செலுத்தும் சவால்கள் எழுந்துள்ளன.
மேலும், குடும்பங்களில் அதிக அளவிலான கடன்களால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நிதி அழுத்தமும் மன நலனை பாதிக்கிறது என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
Reviewed by Author
on
July 25, 2024
Rating:


No comments:
Post a Comment