கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் மைக்கேல் மர்பி
அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி (USS Michael Murphy) என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை (23) கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.
155 மீற்றர் நீளமுள்ள, இந்த ஏவுகணை எதிர்ப்பு கப்பல் 323 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.
கொழும்புக்கு வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை மரபுக்களுக்கமைய வரவேற்றனர்.
கப்பலின் கேப்டன் ஜொனாதன் பி. கிரீன்வால்ட் மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.
இந்த கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) நாட்டில் இருந்து புறப்படவுள்ளது

No comments:
Post a Comment