மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிய பாரிய கஞ்சா கடத்தலை முறியடித்த வவுனியா போலீசார்
வவுனியாவில் பாரிய கஞ்சா கடத்தலை முறியடித்த பொலிஸார்
மான்னார் பேசாளை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட 28 கிலோ 760கிராம்
கேரளா கஞ்சா போதைப்பொருளை, வவுனியா தலமை பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்
இன்று (10) நள்ளிரவு ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது, பொலிஸ் விசேட புலானய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தலமை பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலையிலான குழுவினரே இந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்
மன்னார் பேசாளை பகுதியிலிருந்து கூலர் ரக வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட போதே பொலிஸார் இதனை கைப்பற்றியுள்ளனர்
இந்நடவடிக்கையின்போது கூலர் ரக வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர்களாக பேசாளை பகுதியை சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையை இரண்டு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்
மேலதிக விசரானைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
July 10, 2024
Rating:


No comments:
Post a Comment