அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு!

 முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்திலிருந்து இன்று (30.07.2024)  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்


முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்


நேற்று (29) பிற்பகல் 20 இலட்சம் பணத்துடன் யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளத்திற்கு சென்ற இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் பின்னர் அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை எனவும்

குறித்த இளைஞனின் தொடர்பு கிடைக்காத நிலையில்  அவனது நண்பர்கள் தேடியபோது இன்று அதிகாலை 3.00 மணியளவில் பாண்டியன்குளம் குளக்கரையில் மோட்டார் சைக்கில் இனங்காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து  நபரை காணவில்லை என்று தேடியதை தொடர்ந்து வவுனிக்குளத்தின் மூன்றாது நீர் சுருங்கையில் (நீர் கொட்டு)  உடலம்  இனங்காணப்பட்டு பிரதேச வாசிகளால் உடலம் மீட்கப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.


சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டியன்குளம் பொலீசார் நீதிபதி முன்னிலையில் உடலத்தினை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணையினையும் முன்னெடுத்து வருகின்றார்கள்



.

வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு! Reviewed by Author on July 30, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.