பிரித்தானியாவில் சிறப்பாக இடம் பெற்ற மன்னார் சிறப்பு தளபதி சுபன் நினைவு விளையாட்டு விழா
மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி லெப் கேணல் சுபன் அவர்களிம் 32 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானியா சுபன் விளையாட்டு கழகம் நடாத்திய 29 ஆம் ஆண்டு விளையாட்டு நிகழ்வு இலண்டனில் சிறப்பாக இடம் பெற்றது
பிரித்தானியாவில் ஆண்டு தோரும் நடத்தப்படும் குறித்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்
உதைபந்தாட்டம்,கரப்பந்தாட்டம்,சிறுவர்களுக்கான சிறுவர் விளையாட்டுகள்,பெரியோர்களுக்கான விளையாட்டுக்கள் உட்பட பல விளையாட்டுக்கள் இடம் பெற்றதுடன் வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றி கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது அதே நேரம் தமிழர் பாரம்பரிய உணவுகளும் தயாரிக்கப்பட்டு பங்கேற்பாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது\

No comments:
Post a Comment