யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்த திலித்!
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
ஆரியகுளம் நாகவிகாரை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், ஐந்து சந்தி ஜும்மா பள்ளிவாசல், நல்லை ஆதீனம், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் திலித் ஜயவீர சென்றார்.
இதன்போது, சர்வஜன அதிகாரத்தின் கட்சித் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க, அனுராத ஜகம்பத்
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தாயக மக்கள் கட்சியின் தலைவரான திலித் ஜயவீர ஜனாதிபதி தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது
குறித்த கட்சியின் அங்குரார்ப்பண முதலாவது பொதுக்கூட்டம் இன்று மதியம் (17) ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது.
Reviewed by Author
on
August 17, 2024
Rating:


No comments:
Post a Comment