தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரப் பயணம்
தமிழ்ப் பொது வேட்பாளரின் 'நமக்காக நாம்' தேர்தல் பிரசாரப் பயணம் இன்று (23) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், பொலிகண்டியில் இருந்து ஆரம்பமானது.
தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட குழுவினர் பிரசார துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
இந்த பயணம் தொடர்ந்து வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி, தொண்டைமாணாறு, வளலாய், பலாலி, தையிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களின் ஊடாக நகர்ந்தது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் அரியநேத்திரனுக்கு வெற்றி திலகமிட்ட தாயொருவரின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இதேவேளை நாளை (24) மாலை 3 மணியளவில் காங்கேசன்துறை வெளிச்ச வீட்டுப் பகுதியில் இருந்து பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
Reviewed by Author
on
August 23, 2024
Rating:


No comments:
Post a Comment