மாணவியை தாக்கி காயப்படுத்திய இரு ஆசிரியைகள் கைது
மாணவி ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை முயற்சி மற்றும் கடுமையான தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த இரண்டு ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியைகளில் ஒருவர் சம்பவமொன்று தொடர்பில் குறித்த மாணவியை பலமாக தாக்கியுள்ளதோடு மற்றைய ஆசிரியை இந்த மாணவியை வெயிலில் மண்டியிட வைத்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளான 15 வயது மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியைகள் இருவரும் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Reviewed by Author
on
August 23, 2024
Rating:


No comments:
Post a Comment