வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் விளக்கமறியலில்
மட்டக்களப்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரையும் கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (02) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பில் ஆற்று மண் அகழ்வதற்கான அனுமதி வழங்க கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரை நேற்று (01) கல்லடி கடற்கரையில் மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் இவர்கள் இருவரையும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திதையடுத்து 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், இருவரையும் கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் அவர்களை இங்கிருந்து கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சிறைச்சாலை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்
Reviewed by Author
on
August 02, 2024
Rating:


No comments:
Post a Comment