தலையில் தேங்காய் விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு: பொலிஸார் விசாரணை
கேகாலை - மாவனெல்லை நகரில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் தலையில் தேங்காய் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
மாவனல்லை மாவன வீதி பகுதியில் வசித்து வந்த ரனுலி ஹஸத்மா எதிரிமான்ன என்ற மூன்றரை வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) முற்பகல் 10.45 க்கு முன்னர் குறித்த பாலர் பாடசாலையின் வாயிலை மூடுவதற்காக பாடசாலை பாதுகாவலர் வகுப்பறையை விட்டு வெளியேறிய போது, குறித்த சிறுமியும் மேலும் இரண்டு குழந்தைகளும் பாதுகாவலருடன் முற்றத்திற்கு ஓடியுள்ளனர்.
பின்னர் மூன்று குழந்தைகளும், பாதுகாவலரும் முன்பள்ளி கட்டிடத்திற்குள் சென்று கொண்டிருந்த போது முன்பள்ளி தோட்டத்திலிருந்த தேங்காய் விழுந்ததில் சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
சிறுமி மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிறுமி உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை கண்டி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, அண்மையில் கண்டி - தெல்தோட்டை பகுதியில் தேங்காய் ஒன்று தலையில் விழுந்தமையால் ஒருவயது மதிக்கத்தக்க சிறுமி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment