ரணிலுடன் கைகோர்த்த ராஜித: உடன்படிக்கையும் கைச்சாத்து - நாளை புதிய கூட்டணி உதயம்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளார்.
கடந்த சில நாட்களாக இது தொடர்பிலான பேச்சுகள் இருவருக்கும் இடையில் இடம்பெற்று வந்த நிலையிலேயே இந்த தீர்மானத்தை ராஜித சேனாரத்ன எடுத்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை ரணில் விக்ரமசிங்கவுக்கும் ராஜித சேனாரட்னவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொழும்பு கங்காராம விகாரையில் கைச்சாத்திடப்பட்டது.
ராஜித சேனாரட்னவின் இந்த தீர்மானத்தால் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு தடைகள் ஏதும் ஏற்படாதென ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இதேவேளை, நாளைய தினம் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்படும் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதுடன், இந்தக் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவி அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு வழங்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Reviewed by Author
on
August 13, 2024
Rating:


No comments:
Post a Comment