அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமிழரசு கட்சியின் விசேட அறிக்கை நாளை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை நாளை இலங்கைத் தமிழரசுக்கட்சி வவுனியாவில் வைத்து வெளியிடவுள்ளது.  

குறித்த விசேட அறிக்கையை கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, சிரேஷ்ட துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றம் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் கூட்டிணைந்து யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து நேற்று தயாரித்துள்ளனர். 

இதுகுறித்து மாவை.சோ.சேனாதிராஜா தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசுக்கட்சி தற்போது ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரானக சஜித் பிரேமதசவை ஆதரிப்பதாக அறிக்கப்பட்டுள்ளது. எனினும் கட்சிக்குள் பல்வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுவதன் நாம் எமது மக்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அதற்காகவே விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளோம் என்றார். 

முன்னதாக,  கடந்த செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தொன்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல்கள் விஞ்ஞாபனங்களைஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அறுவர் கொண்ட குழு கூடியிருந்தது. 

இதன்போது, மத்தியகுழுக் கூட்டத்தினை ஒத்திவைத்ததோடு தென்னிலங்கை ஜனாதிபதிவேட்பாளர்களின் தேர்தல்கள் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து அறிக்கையளிக்குமாறு சேனாதிராஜா மற்றும் சி.வி.கே. சிவஞானம் ஆகியோரிடம் பொறுப்பளிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குறித்த இருவரும் யாழில் உள்ள கட்சியின் அருவலகத்தில் கூடி உள்ளடக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக நீண்ட நேர ஆய்வுகள் நடத்தப்பட்டதன் பின்னர் இறுதி அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கை ‘தமிழ் மக்கள் தங்களின் வாக்குத்தெரிவை’ விருப்பத்துக்கு ஏற்றவாறு அளிப்பதற்கான அறிவிப்பை உள்ளடக்கியதகாக இருக்கும் என்று நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமிழரசு கட்சியின் விசேட அறிக்கை நாளை Reviewed by Author on September 15, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.