அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கலாசார விழா..

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்,மன்னார் பிரதேச செயலகமும்,கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் பிரதேச கலாசார விழா நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் நகர பிரதேச செயலாளர்  மனோகரன் பிரதீப் தலைமையில் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டதோடு, பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  க.கனகேஸ்வரன்  மற்றும் விருந்தினர்களாக மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) ய.பரந்தாமன்,மேலதிக மாவட்ட செயலாளர் (காணி)மா.சிறிஸ்கந்த குமார்,வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் திருமதி லாஹினி நிருபராஜ், மன்னார் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் அ.மரின் குமார்,கலாபூசனம் ஜோண் பொஸ்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.


இதன் போது மாவட்டச் செயலகத்திற்கு முன் விருந்தினர்கள் கலாச்சார பேரணி ஊடாக மன்னார் நகர சபை மண்டபம் வரை மங்கள வாத்திய இசையுடன் அழைத்து வந்தனர்.

பின் நகரசபை மண்டபத்தில் கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,பரிசளிப்பு நிகழ்வு,மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.













சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கலாசார விழா.. Reviewed by Author on September 14, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.