யாழில் இடம்பெற்ற விபத்தில் போலீஸ் உத்தியோகஸ்தர் பரிதாபமாக பலி
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆவார்.
வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் இடம்பெற்ற விபத்தில் போலீஸ் உத்தியோகஸ்தர் பரிதாபமாக பலி
Reviewed by Author
on
September 14, 2024
Rating:
No comments:
Post a Comment