ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றி -மன்னாரிலும் கொண்டாட்டம்
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று திங்கட்கிழமை காலை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் மன்னாரில் இன்றைய தினம் திங்கட்கிழமை(23) காலை 11.30 மணியளவில் ஆதரவாளர்களினால் வெற்றிக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பஜார் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் (National People's Power )மன்னார் மாவட்ட கிளையினால் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது பொங்கல் பொங்கி மக்களுக்கு வழங்கப்பட்டு தமது வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடினர்.
இதன் போது அவர் வாக்குறுதி வழங்கிய மன்னார் மாவட்டத்தில் உள்ள சில பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.
குறித்த நிகழ்வில் ஆதரவாளர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் ஆதரவாளர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றி -மன்னாரிலும் கொண்டாட்டம்
Reviewed by Author
on
September 23, 2024
Rating:

No comments:
Post a Comment