தலைமன்னார் - மன்னார் கடற்கரை பகுதிகளிலிருந்து பீடி இலை பொதிகள் கண்டுபிடிப்பு
தலைமன்னார் மற்றும் மன்னார் ஆகிய கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1318 கிலோ 22 கிராம் நிறையுடைய பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடல் மார்க்கமாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடற்படையினரால் கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, தலைமன்னார் நடுகுடா கடற்கரை பகுதியிலிருந்து 206 கிலோ 500 கிராம் பீடி இலை பொதிகளும், மன்னார் கடற்கரை பகுதியிலிருந்து 1050 கிலோ 800 கிராம் பீடி இலை பொதிகளும், மன்னார் வடக்கு கடற்கரை பகுதியிலிருந்து 60 கிலோ 920 கிராம் பீடி இலை பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பீடி இலை பொதிகள் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

No comments:
Post a Comment