யாழில் பால் புரைக்கேறியதில் 12 நாட்களே ஆன சிசு மரணம்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.
கோப்பாய் வடக்கைச் சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த எட்டாம் மாதம் 31ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
பிறந்த குழந்தை நிறைகுறை காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் கண்காணிப்பில் இருந்த நிலையில் கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளது.
இம்மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் நேற்று வியாழக்கிழமை விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனையில் பால்புரைக்கேறி மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
யாழில் பால் புரைக்கேறியதில் 12 நாட்களே ஆன சிசு மரணம்
Reviewed by Author
on
September 20, 2024
Rating:

No comments:
Post a Comment