கொழும்பில் பெண்ணொருவர் கொலை
கொழும்பு - வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் இருந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 32 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
அவரது நிரந்தர வதிவிட முகவரி இதுவரை அறியமுடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
October 07, 2024
Rating:


No comments:
Post a Comment