பிரித்தானியாவின் நோர்தம்ரன் பகுதியில் சிறப்பாக இடம் பெற்ற தமிழர் விளையாட்டு விழா..
பிரித்தானியாவின் நோர்தம்ரன் பகுதியில் சிறப்பாக இடம் பெற்ற தமிழர் விளையாட்டு விழா..
பிரித்தானியாவில் நோர்தம்ரன் பகுதியில் நோர்தம்ரன் தமிழ் விளையாட்டு கழகம் மற்றும் நோர்தம்ரன் தமிழ் கல்விக்கூடம் இணைந்து நடத்திய விளையாட்டு விழா 29-09-2024 அன்று சிறப்பாக நடைபெற்று உள்ளது caroline chisolm பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது
காலை 9 மணிக்கு இந் நிகழ்வு சிறப்பாக ஆரம்பித்தது
இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக நோர்தம்டன் மேஜர் கலந்து சிறப்பித்தித்துடன்
ஐக்கிய இராட்சிய தேசிய கொடியினையும் ஏற்றி வைத்தார்.
நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், கரப்பந்தாட்டம் மற்றும் பெரியவர்களுக்கான கிராமிய விளையாட்டுகளும் நடைபெற்றதோடு சுவையான தாயக உணவுகளும் வழங்கப்பட்டது அத்துடன் விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது.. இன் நிகழ்விலே சிறுவர்கள் பெரியவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்விற்கான நிதி பங்களிப்பினை நோர்தம்டன் தமிழ் வர்த்தகர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது
இந்த விளையாட்டு போட்டி முதல் தடவையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
October 01, 2024
Rating:












No comments:
Post a Comment