வடக்கில் ஈ.பி.டி.பி. முன்னாள் எம்.பி. திலீபன் உட்பட மூவருக்கு மதுச்சாலை பெர்மிட்!
வடக்கில் ஈ.பி.டி.பி. முன்னாள் எம்.பி. திலீபன் உட்பட மூவருக்கு மதுச்சாலை பெர்மிட்!
ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் உள்ளிட்ட மூவருக்கு வடக்கில் மதுபானசாலை பெர்மிட்டுகள் வழங்கியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு மது பானசாலைகளுக்கான அனுமதியைப் பெற்று வவுனியா மாவட்ட
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கு.திலீபன் அவற்றைக் கை மாற்றியுள்ளார்.
இந்த இரு மதுபானசாலை களையும் திறப்பதற்காக பிரதேச செயலகத்திற்கான கட்டணத்தை செலுத்த முயன்றபோதும் பிரதேச செயலகம்அதை ஏற்க மறுத்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளில் அமைப்பதற்கான அனுமதிகளே நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இரு அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த இடங்களில் மதுபான
சாலைகளை திறப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுகின்றன எனத் தெரிகின்றது.
இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதானியான சாகல ரட்ணாயக்காவின் சிபார்சில் வழங்கப்பட்ட ஒரு மது பாடசாலைக்கான பெர்மிட்டின் அடிப்படையில் வவுனியா நெடுங்கேணியில் ஒரு பார் அமைக்க முயற்சிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணிச் சந்தியில் ஓர் மது பானசாலைக்கான அனுமதி சாகல ரட்ணா
யக்க ஊடாக பெறப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.சாகல ரட்ணாயக்க எழுத்து மூலக் கடிதம் வழங்கியே இந்த மது பானசாலைக்கான அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்காவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
பாலநாயகம் என்னும் பெயரில் இந்த மதுபான சாலைக்காகன அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறிய தந்தையின்
மகனின் பெயரில் பரந்தன், கண்டாவளை பிரதேச செயலகத்தில் 2024-06-11 அன்று பணம் செலுத்தப்பட்டு மதுபானச்
சாலைக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment