கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண் விசாரணைகள் ஆரம்பம்
கனடா - ஸ்காபுரோ பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கசோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Orton Park – Ellesmere சந்திப்புக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பம் இடம்பெறுள்ளது. 54 வயதான துஷி லட்சுமணன் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது சகோதரனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சகோதரர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், டொராண்டோ நகரைச் சேர்ந்த அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், கொலைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
October 04, 2024
Rating:


No comments:
Post a Comment