அண்மைய செய்திகள்

recent
-

வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகள்: இலங்கைக்கு 5ஆவது இடம்

வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்தை பிடித்துள்ளது.

CEOWORLD இதழ் இந்த தரவரிசையை தொகுத்துள்ளது.

குறித்த தரவரிசையில் முதலாவது இடத்தில் தாய்லாந்து, இரண்டாவது இடத்தில் கிரீஸ், மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

நான்காவது இடத்தில் போர்த்துக்கல் காணப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை தொடர்பில் CEOWORLD இதழ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

ஆயுர்வேத சிகிச்சை, மறக்க முடியாத ரயில் பயணங்கள் அல்லது தேயிலைத் தோட்டத்தைப் பார்வையிடுவது என அனைத்து வகையான பயணிகளுக்கும் இலங்கையின் மலைநாடு பரந்த அளவிலான அனுபவங்களை வழங்குகிறது.

பௌத்த விகாரைகளில் கொண்டாடப்படும் போயா சம்பிரதாயத்துடன், கலாச்சாரம் மற்றும் மரபுகள் நிறைந்த நாடு இலங்கையாகும்.

ஆரோக்கியமான இலங்கை காலை உணவை அனுபவிக்கவும் வாய்ப்புள்ளது.

கூடுதலாக, நுகர்வில் அதிக ஆர்வமுள்ளவர்களுக்கு இலங்கை ஒரு சிறந்த இடமாகும்.

இரத்தினங்கள், தேநீர் , கைத்தறி துணிகள், தோல் பொருட்கள், பழங்கால பொருட்கள், நகைகள் மற்றும் மட்பாண்டங்கள் ஆகியவற்றைக் காணலாம்.

இந்த தரவரிசை 295,000 க்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.




வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகள்: இலங்கைக்கு 5ஆவது இடம் Reviewed by Author on October 04, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.