தனியாக போட்டியிடத் தீர்மானித்திருக்கும் பிள்ளையான்
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிடத் தீர்மானித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் படகு சின்னத்தில் போட்டியிடுவதற்காக எதிர்வரும் நாட்களில் தமது கட்சி வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பி. பிரசாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய கட்சிகளையும் பொதுக் கூட்டமைப்பாக தமது கட்சியின் படகு சின்னத்தில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும், கட்சியின் தேவைக்கு ஏற்ப செயற்படத் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.
Reviewed by Author
on
October 08, 2024
Rating:


No comments:
Post a Comment