மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வர்ண இரவு நிகழ்வு.
-மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில்,உதவி மாவட்ட செயலாளர் வை.பரந்தாமன் தலைமையில் குறித்த கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.
கௌரவ விருந்தினர்களாக பிரதேச செயலாளர்கள்,வலயக்கல்வி பணிப்பாளர்கள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் விருந்தினர்கள் மற்றும் சகல துறைகளிலும் சாதனை நிலைநாட்டிய மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்களும் வாத்திய இசையுடன் மன்னார் நகர மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.
-பின்னர் மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று சகல துறைகளிலும் சாதனையை நிலை நாட்டிய மாணவர்கள் விருந்தினர்களினால் கௌரவிக்கப் பட்ட தோடு,அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
குறித்த நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்,ஆசிரியர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
October 10, 2024
Rating:














No comments:
Post a Comment