இலங்கையில் நிலவும் மோசமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை
இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களு, களனி, கிங் மற்றும் அத்தனகலு ஆகிய ஆறுகளின் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்திய நீரோடைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள காரணத்தினால் களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
October 12, 2024
Rating:


No comments:
Post a Comment