ஐரோப்பா எல்லைப்பகுதியில் யாழ். இளைஞரின் சடலம் மீட்பு: கொலை என சந்தேகம்
ஐரோப்பா எல்லைப்பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஒரு வருடத்திற்கு முன்னர் அரபு நாடு ஒன்றில் இருந்து ஐரோப்பா நாடுக்கு செல்ல முயற்ச்சி மேற்கொண்டு வந்துள்ளார் .
சிறு வயது முதல் தந்தையை இழந்த இளைஞர், உறவினர்கள் உதவியுடன் ஐரோப்பிய நாட்டுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஐரோப்பா-ரஷ்ய எல்லையை கடக்க முயற்ச்சி செய்த நிலையில் குறித்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.
இது கொலையா? அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர உறவினர்கள் முறச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
October 16, 2024
Rating:


No comments:
Post a Comment